அவனது பார்வையும்.. பேச்சும் முதல் முதலில் என்னை பாதிக்கவே இல்லை.. அவ்வப்போது பார்க்கும் போது சிறு புன்னகை மட்டுமே பேசும்.. இருவரும் ஒரு நாள் பேச தொடங்கினோம்... மலர்ந்த முழு நிலவாய் என் முகம் அவனுடன் பேசும் போது.. 'என்னங்க' என்று ஆரம்பித்த உரையாடல்.. 'போடா ' என்று உரிமையுடன் மாறியது... சரி சரி என்று பிரியமானவனாக அவனது பதில்கள் தொடங்கி.. ஒன்றுமே சொல்லாமல் ஓரக்கண்ணடித்து அவன் புன்னகிக்கையில் கேள்விகளே மறந்தது... காதலில் விழுந்து விட்டோம் என தெரிந்தும் இருவருக்கும் சொல்ல மனமில்லை.. அர்த்தமற்ற வாழ்வை அழகாக்கி செதுக்கும் அவன் மேல் ஒவ்வொரு முறையும் காதலுற்றேன்... என்னை அணைத்து மீள்கையில் தாயின் கைகள் போல் அவனது கைகள் மீதும்... அழுது சாய்கையில் தந்தையை போல் தோள்கள் தரும் அவனது தோள்கள் மீதும் கூட்டத்தில் என்னை மட்டும் தேடும் அவனது கண்கள் மீதும்.. இறுக்கமாக பிடித்து கொண்டு நடக்கும் அவனது விரல்கள் மீதும்.. சண்டையிடும் போது அவன் கோபத்தின் மீதும்.. சண்டையில் என்னை சமாதானம் செய்யும் போது அவன் செய்யும் குழந்தை தனமான செயல்கள் மீதும்... என் மீதுள்ள அக்கரையில் நண்பர்களை ம...
Vidhya's diary