அவன் மீதான என் காதலை வெளிப்படுத்திய பின் முதல் சந்திப்பு என்னவனுடன்...
♥️மாலை பொழுதில் அவனை சந்திக்க போகும் அந்த தருணத்திற்காக சூரிய உதயத்தில் இருந்தே படபடத்து கொண்டு இருக்கும் என் இதயம்..
♥️என்னை நோக்கி அவன் பார்க்கும் முழு முதல் பார்வையும் மீறி..
நான் பேச போகும் வார்த்தைகளை தனியே மனதிற்குள் இப்போதே பேசி பார்த்து கொண்டிருக்கிறேன்....
அந்தி பொழுதில்.. சந்திக்கும் இடத்தை நெருங்கி விட்டேன்..
♥️அவன் எங்கு இருக்கிறான் என தேடி என் கண்கள் அலை பாய.. விழிகள் அங்கும் இங்குமாய் சுழல அவன் இன்னும் வரவில்லையோ என்ற யோசனை..
♥️ ஆனால் அவன் என் அருகில் இருப்பது போல் என் மனதில் தோன்றுகிறது..
♥️ சட்டென்று பின்னால் இருந்து அவன் என்னை அழைத்த குரல் கேட்க.. திரும்பி பார்த்த நொடியில் நான் உறைந்துபோனேன்..
♥️முதல் முறையாக அவனை மிக அருகில் பார்க்கிறேன்.. அவனது முழு பார்வையும் என் மேல் இருக்க.. அவன் கண்களை பார்த்து பேச முடியாமல் நான்..
♥️ இருவரும் அருகருகே அமர.. என்னால் இன்னும் அவன் கண்களை நேருக்கு நேராக பார்க்க முடியவில்லை..
♥️பேச வார்த்தைகளை தேடி அவன் தொடங்கும் போது.. நான் நிமிர்ந்து அவனை முகம் பார்க்க.. மொழிகளை மறந்து அவன்...
♥️மெலிய புன்னகையுடன் உரையாடல் மீண்டும்.. பல ஜென்ம பந்தம் போல் இடைவிடாத உரையாடல்..
♥️பேசும் வார்த்தைகளுக்கு இடையே இடையே அவன் கை விரல் என் விரலை தீண்டும் போது மட்டும் மௌனம்..
♥️விரல் கோர்த்து பக்கம் வர நினைக்கும் அவனது கைகளும்... கண்களை மட்டும் பார்த்து பேசும் பேராண்மையும் இன்னும் அதிகமாக அவனை காதல் செய்ய தூண்டியது...
♥️மெல்ல மெல்ல அவன் கைகளுக்குள் என் கைகள்..
♥️வெண்மேகம் இருள தொடங்க.. இந்த நிமிடம் இப்படியே தொடர கூடாத என்ற எண்ணம் என்னுள்..
♥️அவன் விரல் இடுக்கில் இருக்கும் என் விரல்களை விடுதலை செய்யும் போட்டியில் வெற்றி அவனுக்கு தான்..
♥️நேரம் இன்னும் நீள வேணும் என்ற ஆசை.. அவன் இறுக்கமாக பிடித்திருக்கும் என் விரல்களை விடாது இருக்க வேண்டும் என்று ஆசை... அவனது தோல்களில் தலை
சாய்க்க வேணும் என்றெல்லாம் ஆசை மனதில் ... அவனது மௌனம் இதை மேலும் அழகாகியது..
♥️ விடைபெறும் நேரத்தில்.. பிரிய முடியாமல் பிணைந்து இருக்கும் விரல்களுக்கும்.. இனி எப்போது பார்க்க போகிறோம் என்ற என் கண்களின் ஏக்கத்திற்கும்... அவன் சொன்ன பதிலே என் மீதான அவன் காதல்....
அவன் அன்பில் நான்...
Superb da
ReplyDeleteLovely akka,😘😘😘😘
ReplyDeleteThanks dr
ReplyDeleteSuper
DeleteSuperb, Fabulous, Fantastic, Loveble...................... Wordings chlm no wordings to explain my feelings really superb
ReplyDeleteThanks a lotss chlakuty... ♥️♥️♥️ nice 2 hear ths..
Delete❤️❤️❤️
DeleteWonderful
ReplyDelete