மனிதர்களே...
மனிதத்தை பயிர் செய்யாமல்
தேசியம் விதைத்து என்ன பயன்?
இரவுகளும் பகல்களும்
போட்டி போட்டு சுழன்றாலும்
உன் மீது இழைக்கப்பட்ட
வரலாற்று பிழை என்றுமே மாறாது...
நேற்று எச்சத்திலும்... மிச்சத்திலும்
வாழ்வை நடத்தினாய்.... இன்று
கடமை தவறிய மனிதத்திற்கு - உன்
உதிரத்தையே உரமாக்கி விட்டாய்..
வருங்கால தலைமுறையாகிலும்
மனிதநேயத்தை
உயர்த்தி பிடிக்கட்டும்...
மனிதத்தை விதைத்து
அன்பை அறுவடை செய்ய....
இனி வீறு கொண்டு எழட்டும்...
பாறைகளின் இடுக்கே
துளைத்தெழும் புல்லைபோல....
வன்முறை எனும் முகத்திரையை கிழிக்க
புழுதி கிளப்பி அதிர புறப்படட்டும்...!
Super chellakutty akka
ReplyDelete