அவன்....
என் மீதான காதலை அவன் ஒரு முறை கூட வார்த்தைகளால் வெளிப்படுத்தியதே இல்லை...
ஆயிரம் முறை மேலோட்டமாய் சொன்னாலும் அதை கண்டுகொள்ளாமல் நான்...
சின்ன சின்ன செயல்பாடுகளில் அவன் காதலை சொன்னது வார்த்தைகளை விட அழகு...
எங்கும் செல்லும் போது ஒரு முறை கூட விரல் கூட என்னை தீண்டியது இல்லை... அன்பால் என்னை தீண்டியது அவனது பாசம்...
அவனது பார்வை கூட அவன் சொல்ல நினைப்பதை சொன்னது...
எனக்கு பிடித்ததை வாங்கி குடுத்து மகிழ்வதில் அவனுக்கு மகிழ்ச்சி...
Comments
Post a Comment