Skip to main content

Posts

Showing posts from November, 2019

சினேகிதனே....

கார்த்தி...  நம் அளவற்ற அன்பின் வெளிப்பாடே...  நாம் இடும் அளவில்லா சண்டைகள்...  நமது பாசப்பிணைப்பின் வெளிப்பாடே..  பேசவிடில் கூட புரிந்து கொள்ளும் அன்பு...  எத்துணை சண்டையாயினும்,  எனக்கு எதுமெனில் தாங்காமல் துடிக்கும் உந்தன் தவிப்பு கூறிடும் உந்தன் பாசத்தை...  எவ்வளவு கோபப்படுத்தினாலும்....  என்னை சிரிக்க வைக்க நீ எடுக்கும் முயற்சிகள் புரியவைத்திடும் உந்தன் அக்கறையை...  என்ன நேரிடினும் சோகத்தில் உன் முக மாறுதலை கண்டிட்டால் பதைபதைத்து தான் போகிறேனடா எருமை...  என் உயிர் வாங்கும் என் உயிரே....  உனக்காக என் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் மா..... 

மனிதம்

மனிதர்களே...  மனிதத்தை பயிர் செய்யாமல் தேசியம் விதைத்து என்ன பயன்?  இரவுகளும் பகல்களும் போட்டி போட்டு சுழன்றாலும் உன் மீது இழைக்கப்பட்ட வரலாற்று பிழை என்றுமே மாறாது... நேற்று எச்சத்திலும்... மிச்சத்திலும் வாழ்வை நடத்தினாய்.... இன்று கடமை தவறிய மனிதத்திற்கு - உன் உதிரத்தையே உரமாக்கி விட்டாய்..  வருங்கால தலைமுறையாகிலும் மனிதநேயத்தை உயர்த்தி பிடிக்கட்டும்... மனிதத்தை விதைத்து அன்பை அறுவடை செய்ய.... இனி வீறு கொண்டு எழட்டும்... பாறைகளின் இடுக்கே துளைத்தெழும் புல்லைபோல.... வன்முறை எனும் முகத்திரையை கிழிக்க புழுதி கிளப்பி அதிர புறப்படட்டும்...!