Skip to main content

அவன் காதலில் விழுந்தேன்

அவனது பார்வையும்..
பேச்சும் முதல் முதலில் என்னை பாதிக்கவே இல்லை..

அவ்வப்போது பார்க்கும் போது சிறு புன்னகை மட்டுமே பேசும்..

இருவரும் ஒரு நாள் பேச தொடங்கினோம்...
மலர்ந்த முழு நிலவாய் என் முகம் அவனுடன் பேசும் போது..

'என்னங்க' என்று ஆரம்பித்த உரையாடல்.. 'போடா ' என்று உரிமையுடன் மாறியது...

சரி சரி என்று பிரியமானவனாக அவனது பதில்கள் தொடங்கி.. ஒன்றுமே சொல்லாமல் ஓரக்கண்ணடித்து அவன் புன்னகிக்கையில் கேள்விகளே மறந்தது...

காதலில் விழுந்து விட்டோம் என தெரிந்தும் இருவருக்கும் சொல்ல மனமில்லை..

அர்த்தமற்ற வாழ்வை அழகாக்கி செதுக்கும் அவன் மேல் ஒவ்வொரு முறையும் காதலுற்றேன்...

என்னை அணைத்து மீள்கையில் தாயின் கைகள் போல் அவனது கைகள் மீதும்...

அழுது சாய்கையில் தந்தையை போல்  தோள்கள் தரும் அவனது தோள்கள் மீதும்

கூட்டத்தில் என்னை மட்டும் தேடும் அவனது கண்கள் மீதும்..

இறுக்கமாக பிடித்து கொண்டு நடக்கும் அவனது விரல்கள் மீதும்..

சண்டையிடும் போது அவன் கோபத்தின் மீதும்..

சண்டையில் என்னை சமாதானம் செய்யும் போது அவன் செய்யும் குழந்தை தனமான செயல்கள் மீதும்...

என் மீதுள்ள அக்கரையில் நண்பர்களை மிஞ்சும் அவனின் பாசத்தின் மீதும்...

நாணம் குறைந்திருக்க,  உறவில் உரிமை நிலைத்திருக்க அவனது முத்தங்கள் ஒவ்வொன்றிலும் அவன் மீது காதலில் விழுந்தேன் நான்...

Comments

Post a Comment

Popular posts from this blog

என்னவனே

என்னவனே..  உன் காதலில் என்னை களவாடிய ராட்சசன் நீ...  உன்னருகே எப்போதும் இருக்க ஆசை..  உன் அணைப்பில் கரைந்திட ஆசை..  உன் கோபத்தில் மிரளந்திட ஆசை..  உன் சோகத்தில் தோள் கொடுக்க ஆசை..  உன் கவலைக்கு மருந்தாக ஆசை..  ஆயிரம் கதை பேசும் உன் பார்வையில் விழுந்திட ஆசை..  என் வாழ்வின் ஒவ்வொரு நொடியும்,  ஒவ்வொரு நிமிடமும்,  உன் பதியாய், தாயாய், தோழியாய்....  உன்னில் பாதியாய் இருந்திட ஆசையடா..  உன் காதல் யாவும் ரசித்திட.. கரைந்த நாட்கள் போதாதடா...  வரும் நம் கால கவிதை நாம் வாழ வேணும் என்னவனே... Hapieee valentines day dear.. 

மனிதம்

மனிதர்களே...  மனிதத்தை பயிர் செய்யாமல் தேசியம் விதைத்து என்ன பயன்?  இரவுகளும் பகல்களும் போட்டி போட்டு சுழன்றாலும் உன் மீது இழைக்கப்பட்ட வரலாற்று பிழை என்றுமே மாறாது... நேற்று எச்சத்திலும்... மிச்சத்திலும் வாழ்வை நடத்தினாய்.... இன்று கடமை தவறிய மனிதத்திற்கு - உன் உதிரத்தையே உரமாக்கி விட்டாய்..  வருங்கால தலைமுறையாகிலும் மனிதநேயத்தை உயர்த்தி பிடிக்கட்டும்... மனிதத்தை விதைத்து அன்பை அறுவடை செய்ய.... இனி வீறு கொண்டு எழட்டும்... பாறைகளின் இடுக்கே துளைத்தெழும் புல்லைபோல.... வன்முறை எனும் முகத்திரையை கிழிக்க புழுதி கிளப்பி அதிர புறப்படட்டும்...!